தேசிய உற்பத்தித் திறன் விருது - எமது பாடசாலைக்கு (மட் /மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய தேசிய பாடசாலை) "திறமை விருது" கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்விருதானது பாடசாலை மற்றும் அரச திணைக்களங்களின் செயற்பாடு, முகாமைத்துவம், திட்டமிடல் முதலானவற்றை கருத்திற் கொண்டு வழங்கப்படும் விருதாகும். அந்தவகையில் "திறமை விருது" பெற உழைத்த அதிபர்,பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சமூகம் குறிப்பாக முகாமைத்துவ குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அத்துடன் இவ்விருதிற்காக நெறிப்படுத்திய பிரதேச செயலகம், வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றுக்கும் எமது நன்றிகள்.









