புவியினிலே எங்கள் கலைத் தாயகமே
புதுக்குடியிருப்பு வித்தியாலயமே
ஆதியிலே ஒரு கோடதை முறித்து
ஏடெழுதும் கரி முகவன்
அருகினில் கண்ணகை இவர்களின் அருளை
அவனியில் நாம் தினம் பெறுவோம்
அரும்பல கலைகளைப் பயில்வோம் - அவை
அறிந்ததன் படி வழி நடப்போம்
அன்னை பிதா குருவை மதிப்போம்.
புவியினிலே எங்கள் கலைத் தாயகமே
புதுக்குடியிருப்பு வித்தியாலயமே.
உத்தம ஞானம் உயர்வுறு ஒழுக்கம்
உண்மைகள் அறிவதில் ஊக்கம்
சத்திய வாக்கு தமிழ் மொழி அன்பும்
தலை நிமிர் வாழ்க்கையும் பெறுவோம்
நித்தியம் நேர்மையில் நடப்போம்
மனு நீதியில் சமரசம் தொடுப்போம்
உத்தமராய் வழி நடப்போம்.
புவியினிலே எங்கள் கலைத் தாயகமே
புதுக்குடியிருப்பு வித்தியாலயமே
கலைகள் விஞ்ஞானம் கமத்தொழில் கைத்தொழில்
கணிதமும் சமயமும் அறிந்து,
புனிதநற் கரங்களை தொழிலினிற் பழக்கி
பொருள் வளம் பெருக்கியே உயர்வோம்
போதனை சாதனை பெறுவோம் - நாம்
புதுமையும் பழமையும் இணைப்போம்
புகழுடன் சேவைகள் புரிவோம்






