மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு

வரலாறு

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு

sclentrens.jpg
Screenshot 2025-03-01 081314.png

எமது வித்தியாலயம் 1875.05.14ம் திகதி திண்ணைப்பள்ளியாக தொடங்கிய போது இங்கு 07 மாணவர்களே கல்வி பயின்றனர் .இதன் முதல் அதிபராக கடமையாற்றப் பணிக்கப்பட்டவர் திரு.க.விநாயகம்பிள்ளை ஆவார்.இங்கு 1972ம் ஆண்டு வரை தரம் 05 வரையுமே வகுப்புகள் இருந்தன.அதன் பின் .படிப்படியாக வகுப்புகள் உயர்ந்து 1975ல் அமரர்.செ .சிவஞானம் அவர்கள்  காலத்தில்  தேசியக் கல்விப் பொதுத்தராதர வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டது .அதனைத் தொடர்ந்து 1977ல் அமரர் .வி.கணபதிப்பிள்ளை அதிபர் காலத்தில் மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயமாகப் பெயர் சூட்டப்பட்டு  1979ல் க.பொ.த [சாதாரண]வகுப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.இதன் பிற்பாடு 1996ம் ஆண்டு திரு .செ .நடராசா அதிபர் காலத்தில் 1c வகைப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டதுடன் கண்ணகி மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றமும் பெற்றது .

பாடசாலைக்கென தனித்துவமான பனிக்கூற்று ,தூர நோக்கு மகுட வாசகம் ,மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி , இலச்சினை போன்ற விடயங்களை இப் பாடசாலையானது கொண்டிருப்பதுடன் வருடாந்தம் பாடசாலை சமூகத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார நிகழ்வுகளை கொண்டாடுவது இப் பாடசாலையின் சிறந்த கலாசார நடைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாகும்
இப் பாடசாலையானது புதிய கல்முனை பிரதான வீதியில் இந்து கலாசாரத்தைப்பிரதிபலிக்கும் விநாயகர் மற்றும் கண்ணகி அம்மன் ஆலயங்களிற்கு அண்மத்தியிலும் மக்கள் சமூகம் செரித்து வாழும் பிரதேசத்திலும் அனைத்து வளங்களையும் கொண்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும் .

இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் ஜீவனோபாயமாக விவசாயம் ,மீன்பிடி ,நெசவு கைத்தொழில் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் ஆரம்பகாலத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொது பொருளாதார ரீதியில் உயர் நிலையை அடைந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

 பாடசாலை சமூகத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டதாக காணப்படுகின்றது . பாடசாலையின் விழாக்கள் சிரமதனங்கள் போன்றவற்றில் தங்களது பங்களிப்பினை சமூகத்தினர் வழங்குவதோடு பாடசாலைக்கு தேவையான வளங்களை வழங்குவதில் பங்களிப்பு செய்கின்றனர் .

 எமது பாடசாலை அரசின் " சுபிட்ஷத்தின் நோக்கு கொள்கை" பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதன்படி நாடளாவிய ரீதியில் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்குதல் என்பதன் அடிப்படையில் எமது பாடசாலையும் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.[2021]